Friday, July 16, 2010

தமிழ்..,!தமிழச்சி..! என் தாய்..!

தமிழ்..,!தமிழச்சி..!

என் தாய்..!

ஒரு தமிழச்சி கருவினிலே உயிரானேன்

பத்துத் திங்கள் அவளுடலில் உருவானேன்

ஒரு நாளில் புவித் தாயின் கரம் புகுந்தேன்

தூயத் தமிழ் உயிர்காற்றை சுவாசித்தேன்

தமிழமுதம் பருகி நிதம் உடல் வளர்த்தேன்

தலைக் கவிழ்ந்து தவழும்போது ஒலிகேட்டேன்

தாய் இசைக்கும் தாலாட்டில் மொழிகேட்டேன்

செம்மொழியாம் தமிழ்மொழியின் இசைக்கேட்டு

மெய்மறந்தே அவள் மடியில் கண்ணயர்ந்தேன்

என் அன்னை அரவணைப்பில் மகிழ்ந்திருந்தேன்

அவளன்பு நெஞ்சின் ஆசையினை நிறைவேற்ற

தமிழ்ப்பள்ளிக்கூடம் நோக்கி முதலடி யெடுத்தேன்

தமிழ்த் தாயே உந்தனிடம் சரணடைந்தேன்

நீ கொடுத்த உணர்வை யள்ளி பருகியதால்

குருதியெல்லாம் உன்னுருவே வாழுதம்மா

எனதுருவே உனதுருவாய் ஆனபின்பு

பிரிவு என்ற துயரம் என்றும் நமக்கேது

No comments:

Post a Comment