Friday, July 16, 2010

பள்ளிச் செல்லும் மகனே


பள்ளிச் செல்லும் மகனே

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்.(67)

என்ற வள்ளுவரின் கூற்றுக்கேற்ப அன்புள்ளம் கொண்ட ஒரு தந்தை தன் குழந்தைகள் வாழ்க்கையில்வெற்றி பெற,கல்வி மிக அவசியமென்பதை உணர்த்த தன் வாழ்க்கை அனுபவத்தையே அடிக்கடி தன் குழந்தைகளிடம் கூறக் கேட்டிருப்போம். அப்படி வந்த ஒரு பாடல்தான் இது.தந்தையிடம் அறிவைத்தானே வாங்க முடியும், வாழ்க்கைக்கு பயன் தரும் பல கருத்துக்களை தன்னலம் கருதாமல் சரியான நேரத்தில் தருபவர் தான் தந்தை.ஆகவே தந்தையை மதிப்பவர் மிக உயர்ந்தவரே என்றால் அது மிகையாகாது.


பள்ளிச் செல்லும் மகனே,

கொஞ்ச நேரம் நில்லடா

பாடம் கற்று உயர்வை

உன் நெஞ்சில் கொள்ளடா (2)

மாணவப் பருவம் தானே

மிக அரிய உருவம் தானே

உணர்ந்து சொன்னேன் நானே

காலம் கட த்தாதே வீணே

உயர்வை எண்ணடா தம்பி !

வாழ்வதன் லட்சியம் வெல்ல

உண்மையின் வழியில் செல்வாய்

உள்ளத்தில் வீரம் கொண்டே

வெற்றிக் கனியதை வெல்வாய்

உயர்வை எண்ணடா நாளும் !

உணர்திடு ஓடிடும் தொல்லை

வானந்தான் உனது எல்லை

பறந்து செல்வாய் முன்னே

வந்திடும் வெற்றியும் பின்னே

உயர்ந்து நில்லடா தம்பி !

No comments:

Post a Comment